19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சாமர சில்வா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சாமர சில்வா, இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் இந்த ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31, 2026 வரை அமுலில் இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இவர் முன்னதாக இலங்கை அணிக்காக 75 ஒருநாள் போட்டிகள், 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 16 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
