வெளிநாட்டுப் பிரஜையின் பயணப்பொதியினைத் திருடிய நபர் கைது

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில், வெளிநாட்டுப் பெண் ஒருவரின் பயணப்பொதியினைத் திருடிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் களனி – பெத்தியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் போக்குவரத்துப் பாதிப்பு காரணமாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குறித்த பெண் பதுளை – எல்ல நோக்கி தனியார் பேருந்தில் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இதன்போது, அவரது பயணப்பொதியை சந்தேக நபர் திருடிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்