
18 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு
தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் மார்ச் 3 ஆம் திகதி முதல் ஏப்ரல் 16 வரையான காலப்பகுதிக்குள் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அதே காலக்கட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 14 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்