18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவுநேரத்தில் பணியாற்ற அனுமதி : அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
உணவகங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணிகளில், இரவுநேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பணியாற்றக் கூடிய வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த புதிய விதிகளின் கீழ், இரவு வேலையில் ஈடுபடும் பெண்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலனுக்கு, நிறுவனங்களின் அல்லது வேலைத்தளங்களின் உரிமையாளர்களே பொறுப்பு என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருத்தமான தங்குமிடம் வழங்கப்படுவதை வேலைத்தள உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும், மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை பணிக்கமர்த்தப்படும் பெண்கள் வேலை முடிய தமது வசிப்பிடத்திற்கு செல்ல பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இரவு நேரங்களில் பாதுகாப்பு உட்பட, பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், ஆகிய விதிமுறைகள் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

