1700 ரூபாய் சம்பளம் கட்டாயமாகப் பெற்றுத்தரப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் கட்டாயமாகப் பெற்றுத்தரப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி அளித்துள்ளார்.

மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,

மத்துகம நகரில் முதல் முறையாக தமிழ்ப் பாடசாலை ஒன்றை அமைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, சம்பளப் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதி அளித்திருக்கிறார், மக்களை சரியாக வழிநடத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

நாட்டில் கேஸ், மின்சாரம், மருந்து இல்லாத வேளையில் அனுரவும் இருக்கவில்லை, சஜித்தும் இருக்கவில்லை.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் இருக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே மக்களை மீட்க வந்தார், அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் கட்டாயமாகப் பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார்.

இதன்போது ‘ஐந்து அம்ச’ இளைஞர் பிரேரணை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.

தருஷி அனுத்தரா எதிரிமான்னவினால் ஜனாதிபதிக்காக இயற்றப்பட்ட பாடல் ஒன்றும் இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்