170 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

இரணைத்தீவு கடற்பகுதியில் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நேற்று சனிக்கிழமை மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த படகொன்றை நேற்று கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது குறித்த படகிலிருந்து 176 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்