
வெடுக்குநாறிமலை ஆலய வளாகத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்தபிக்குகள்
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்று கிழமை பௌத்தபிக்குகள் தலைமையிலான ஒரு குழுவினர் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் விஜயம் செய்திருந்தனர்.
அங்கு சென்ற குழுவினர் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதி தங்களது இடம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்தனர்.
மேலும் குறித்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் பாதணிகளுடன் உள்நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
