16 வயதுடைய சிறுவன் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு!

நுவரெலியா – பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்