
16 இலட்சம் ரூபாய் கொள்ளை : இரண்டு கான்ஸ்டபிள்கள் உட்பட நால்வர் தடுத்து வைத்து விசாரணை!
நபர் ஒருவரை கடத்தி 16 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக வாழைத்தோட்டம் பொலிஸார் இன்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்கள் நால்வரையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.
விசாரணைகளின் பின்னர் அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
