
16 ஆடுகளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
லுணுகலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 16 ஆடுகளை கொண்டு சென்ற ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து லுணுகலை பகுதியில் இருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த மகிந்திரா ரக லொறி ஒன்றை இடைமறித்து சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் 16 ஆடுகள் இருப்பதனை அவதானித்துள்ளனர்
இதன்போது மிருக வதை சட்டத்தின் கீழ் 32 வயதுடைய லொறியின் சாரதியை கைது செய்த லுணுகலை பொலிஸார், மகிந்திரா ரக வாகனத்தையும், ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்
குறி்த்த நபர் லுணுகலை ஜனதா புற பகுதியிலிருந்து பிபிலை நோக்கி ஆடுகளை கொண்டு சென்றதாவும், அவரிடம் ஆடுகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இருந்த போதிலும், அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடுகளை விடவும் அளவுக்கு அதிகமான ஆடுகளை கொண்டு சென்றமையாலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக நபரை இன்று புதன்கிழமை பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
