சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இராஜாங்க அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமித்தார். இதில் அமைச்சர்களான திரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களை புறந்தள்ளி அனைவரும் நாடாளுமன்றத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்