மட்டக்களப்பில் 15 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்
நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பர்னான்டோ தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்,தனஞ்சயன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் சதா சுபாகரன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது தங்கள் மீது நம்பிக்கை கொண்ட சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் தொகைக்கான காசோலைகள் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளினால் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
தேசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளினால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்