150 ஆண்டு பழைமையான படகு மீட்பு
ஷாங்காயில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்று சகதியில் புதையுண்ட பிரமாண்ட படகு மீட்கப்பட்டது.
இந்த படகு அப்பகுதியை 1644-1911 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி செய்த குயிங் வம்சத்தை சேர்ந்தது ஆகும்.
கலாச்சார நினைவுச்சின்னங்களின் புதையல் என்று நம்பப்படும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான படகு உயர் தொழில்நுட்பத்தின் மூலம் மீட்கப்பட்டது. இந்த படகு அப்பகுதியை 1644-1911 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி செய்த குயிங் வம்சத்தை சேர்ந்தது ஆகும்.
ஷாங்காய் பேரரசர் டோங்சியின் ஆட்சியின் போது கட்டப்பட்ட ஒரு மரப் படகு யாங்சே நதி முகத்துவாரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் சேற்றில் புதைந்தது. இதனை மீட்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு படகை சுற்றி 22 வில் வடிவத்திலான விட்டங்களை பொறுத்தி உருளைகளை ஏற்படுத்தி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்கப்பட்டது.
8 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் எடை கொண்ட படகு 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. அதனை ஷாங்காய் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.