150 ஸ்பா நிலையங்களுக்கு பூட்டு

நீர்கொழும்பில் 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் 150 ஸ்பா நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பிலுள்ள திடீர் சோதனை நடிவடிக்கையின் போது 150 ஸ்பா நிலையங்களில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பகுதியில் ஸ்பா நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.