150 சிக்ஸர்களை கடந்த வீரர்கள் வரிசையில் இணைந்த சூர்யகுமார்

 

இந்திய T20 அணியின் தலைவரான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் அவர் இடம்பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது t20 போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.

150 சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா 205 சிக்ஸர்களையும் மொஹமட் வசீம் 187 சிக்ஸர்களையும், மார்ட்டின் கப்டில் 173 சிக்ஸர்களையும் வளாசியுள்ளதுடன், ஜோஸ் பட்லர் – 172 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.