15 வயது மாணவனின் தவறான முடிவு

ஹட்டன் லெதண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பகுதியில் பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர்.கோபி ஹர்ஷன் (வயது – 15) என்ற மாணவனே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த மாணவணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.