15 வயது மூத்தவருடன் திருமண ஏற்பாடு: விபரீத முடிவெடுத்த யுவதி!
திருகோணமலை பகுதியில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டுவந்த நிலையில் அதனை விரும்பாத யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
23 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த யுவதியை விட பதினைந்து வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்