
15 வயது சிறுமி மசாஜ் நிலையத்தில் வன்கொடுமை:17 வயது பெண் கைது
களுத்துறையில் 15 வயது சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்ற சாட்டில் 17 வயது பெண் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி குறித்த பெண் சிறுமியை தன்னுடன் ரயில் மூலம் நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் சிறுமி குறித்த யுவதியிடம் கேட்டபோது, இது மசாஜ் நிலையம் என அவர் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் மசாஜ் நிலையத்தில் இருந்து திரும்பிய நிலையில் காதலனை சந்தித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சிறுமி ஊர் திரும்பி பொலிஸ் நிலையத்துக்கு சென்று மசாஜ் நிலையத்தில் தான் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சிறுமியை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் யுவதியைக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
