15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்
இந்தியாவில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கோயிலில் வைத்து 22 வயது இளைஞர் தாலிகட்டிய வீடியோ வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரை அடுத்து பொலிஸார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய குறித்த இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
