15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை
காலி மாவட்டத்தின் பட்டுவத்துடாவ பகுதியில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 01.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 04.00 மணிவரையிலான காலப்பகுதியில் அக்மீமன, போத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்