தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம்
-யாழ் நிருபர்-
தையிட்டி சட்ட விரோத விகாரையில் ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு சட்டத்தரணி சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்