
140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற 45 வயதுடைய நபர் ஒருவர் ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை-ஹாலிஎல நகரிலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் மரக்கறிகளுடன் மறைத்து 140 லீற்றர் பெற்றோலை ஏற்றிக்கொண்டு ஊவா கெட்டவெளப் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்தது, இடைமறித்து சோதனைக்குட்படுத்திய போது 140 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டது.
கடந்த சில மாதங்களாக இவர் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த நபரை இன்று புதன்கிழமை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
