14 வயது பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை
-பதுளை நிருபர்-
லுணுகலை 27 ஆம் கட்டை பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை, என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது
குறித்த மாணவியின் பெற்றோர் நேற்று புதன்கிழமை தங்களால் நடத்தி செல்லப்படும் கடை ஒன்றுக்கு சென்றுள்ளனர்
மீண்டும் சுமார் 3 மணி அளவில் வீடு சென்று பார்த்த போது சிறுமி வீட்டில் இருக்கவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
சிறுமியை தேடும் நடவடிக்கையில் லுணுகலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்
