
14 வயது பாடசாலை மாணவியை காணவில்லை!
-பதுளை நிருபர்-
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒப்டன் புலுகொல பகுதியை சேர்ந்த 14வயதுடைய லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்
மாணவியை தேடும் பணியில் விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
