
14 வயது பாடசாலை மாணவனால் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 9 பேர் பலி
செர்பியாவில் 14 வயது சிறுவன் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாயுள்ளனர். மேலும், 6 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது 8 மாணவர்களும் ஒரு பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கிரெடி மாணகணத்தில் விரகார் பகுதியில் தொடக்கப் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கம் போல மாணவ மாணவியர் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்த போது, 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.
இவர் தனது தந்தையின் துப்பாக்கியை பாடசாலைக்கு எடுத்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மாணவன் அமைதியானர் ஒருவர் என அனைவராலும் அறியப்பட்டுள்ளனர். எனினும் சம்பவத்திற்கான காரணம் என்னவென்று பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்