
14 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சிறுவனின் மாமா கைது!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில், 14 வயது சிறுவன் ஒருவரை, பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த சிறுவனின் மாமனாரை, நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் தந்தையும், தாயாரும் பிரிந்து வாழ்வதுடன், சிறுவனின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார்.
சிறுவனின் தந்தையின் உறவினரான மாமாவின் வீட்டிற்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதர்கள் சென்று, தமது தந்தையாருடன் தொலைபேசியில் உரையாடுவது வழமை
மேலும், சிறுவனின் தந்தை, சிறுவனின் மாமா ஊடாக தனது பிள்ளைகளுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் கடந்த வருடம் டிசம்பர் 24 ம் திகதி தனது மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சிறுவனின் மாமா சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மீண்டும் கடந்த 27 ஆம் திகதி குறித்த நபர் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுவன் தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி சிறுவனின் தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து, அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்
அதன் பின்னர், சந்தேகநபரான சிறுவனின் மாமா தலைமறைவாகிய நிலையில், அவரை பொலிஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், சந்தேகநபரை இன்று புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
