
14 உயிர்களை பறித்த பசறை பஸ் விபத்து இடம்பெற்று இன்றோடு நான்கு வருடங்கள்!
பசறை பஸ் விபத்து இடம்பெற்று இன்றோடு நான்கு வருடங்கள் ஆகின்றது
கடந்த 2021 மார்ச் 20ஆம் திகதி அதிகாலை 6.55 மணிக்கு லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று அதிகாலை சுமார் 7.20 மணியளவில் பசறை 13 ம் கட்டை மெத்தைக்கடைக்கு அருகாமையில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 14 பேர் உயிரிழந்ததோடு, 32 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் இன்று உடல் உறுப்புகள் இயங்காமல் அங்கவீனமான முறையில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.