13, 14 இல் மின்வெட்டு இல்லை

புத்தாண்டு தினமான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இரு தினங்களில் மின்சாரத் தேவையில் கணிசமான குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான எரிபொருள் கிடைத்தால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.