
13 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில், 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞர், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் மச்சான் முறையுள்ள 19 வயது உடைய இளைஞன், சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
