13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் பாதிப்பு!

நாட்டில், ஜனவரி 13 ஆம் திகதி முதல் முதல் 21 ஆம் திகதி வரை ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த, 20,333 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில், 02 பேர் இறந்ததாகவும், 03 பேர் காயமடைந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

தற்போது வரை 228 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 686 பேர், 18 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்ததால், தாத்ரிமலை பகுதியில் பெரிய வெள்ளம் பதிவாகியுள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யான் ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்ததால், ஹொரவ்பத்தான பகுதியில் சிறிய வெள்ளம் பதிவாகியுள்ளது.

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மன்னம்பிட்டிய பகுதிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க