13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் சுமார் 13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற விசாரணையில்‘குறித்த நபர் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை 12 லிருந்து 16 வயது வரை உள்ள 13 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அதில் 8 சிறுமிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் இத் தீர்ப்புக்கு பெரும்பாலான மக்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.