13 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
நுகேகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப் பொருட்கள் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பாதாள குழு உறுப்பினரான ‘துபாய் கபில’ என்பவருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் ஆண் மற்றும் பெண் ஒருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நுகேகொடை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட சோதனையின் போது 13 கிலோ ஹெரோயின், 06 கிலோ ஹாஷ் மற்றும் 0.5 கிலோ கொக்கெய்ன் ஆகியவற்றை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்