13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் என்னுடைய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது – ரில்வின் சில்வா
13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தச்சட்டம் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்கத் தவறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது.
எனவே மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும் வரை 13வது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் ஒழிக்கப் போவதில்லை எனவுமே தாம் கூறியதாகத் தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்