200 மணித்தியாலங்கள் ஓய்வின்றி போராடி உயிர் நீத்த உக்ரைன் வீரர்

உக்ரைன் நாட்டின் மாக்சிம் (Maksym) என்ற வீரர் எந்தவொரு ஓய்வும் இன்றி 200 மணித்தியாலங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு பகுமத் (Bakhumat)  நகரில் ரஷ்யாவின் ஸ்னைப்பர் (Sniper) தாக்குதலில் பலியாகியுள்ளார்.

உக்ரைனை கடந்த வருடம் ரஷ்யா ஆக்கிரமித்த போது 22 வயதான மாக்சிம் மற்றும் 18 வயதான இவான் ஆகியோர் போராட்டத்திற்கான தொண்டர் பணியில் இணைந்துள்ளனர்.

ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் 5 நிமிடங்களுக்கு கூட அவர் கண்களை மூடாமல் 8 நாட்களாக உணவின்றி, உறக்கமின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கொல்லப்பட்ட வீரரின் தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் போரில் கொல்லப்பட்ட வீரரின் இளைய சகோதரனான இவான் “அவர் எப்பொழுதும் என்னுடனே இருந்தார், நான் அவருடன் இருந்தேன், என்னை பொறுத்த வரையில் அவர் தான் மிகவும் அன்பானவர்” எனவும் இறுதி நிமிடங்களிலும் சகோதரனும் தானும் ஒன்றாகவே இருந்ததாக இவான் கூறியுள்ளார்.

போரில் காயமடைந்த தனக்கு சகோதரன் மாக்சிம் முதலுதவி அளித்ததுடன் தன் உயிரை பிரியவிடாது காப்பாற்றியதாகவும் இவான் தனது வலிமிக்க நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்