12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்த சூர்யா..

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை மலைபோல் நம்பி ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ரெட்ரோ படத்தை முடித்த கையோடு, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

12 ஹீரோக்கள் நிராகரித்த படத்தில் சூர்யா நடித்து சூப்பர்ஹிட்டான கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் கஜினி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்த கதையை 12 ஹீரோக்களிடம் கூறியுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ். அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யாண் உள்ளிட்ட 12 ஹீரோக்கள் இந்த கதையை கேட்டு நிராகரித்துள்ளனர். அஜித் இந்த கதையை முதலில் ஒப்புக்கொண்டு நடிக்க துவங்கியுள்ளார். போட்டோஷூட் கூட நடந்துள்ளது. ஆனால், அதன்பின் இப்படத்திலிருந்து அஜித் விலகியுள்ளார்.

12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்த சூர்யா..

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24