12 விமானங்கள் ரத்து!

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. மோன்தா புயல் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் தமிழகத்தைவிட்டு சற்றே விலகி சென்றது.

ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ. காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ. தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் காரணமாக காலை 5.30 மணி வரை 8 இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.

புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரா உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.