
12 வயது பிக்கு கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று முன் தினம் திங்கட்கிழமை கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
12 வயதுடைய பிக்குவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிவெனாவில் பிக்கு இல்லாததால், மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கிணற்றில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார். எனினும் கிணற்றில் இருந்து மீட்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிக்குவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
