12 வயது சிறுமி துஷ்பிரயோகம் : மூவர் கைது

பண்டாரகம பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் திருமணமான தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் காதலன் என நம்பப்படும் 19 வயதுடைய இளைஞனும், இளைஞனின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்ட திருமணமான தம்பதியரும் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி, இளைஞரை சமீபத்தில் அப்பகுதியில் நடத்தப்பட்ட ‘தன்சாலை’யில் சந்தித்ததாகவும், அதன் பிறகு இருவரும் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறுமி இளைஞனை நேரில் சந்திக்கச்சென்றுள்ளார் அப்போது குறித்த இளைஞனின் கோரிக்கையின் பேரில் அவர் தம்பதியரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுமி உண்மையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக சிறுமி பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்