
12 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில்
மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயதுடைய 3 ஆண் மாணவர்களும் 9 பெண் மாணவியர்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த மாணவ மாணவிகள் நேற்று மாலை 6 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் போது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிகொட்டுக்கு இலக்கானவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
