12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவீந்திரா 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் வாசிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 156 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தநிலையில் 103 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 255 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 245 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்படி இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.