
11 மாவட்டங்களில் அநுர முன்னணியில்
ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க தொடர்ந்தும் 11 மாவட்டங்களில் முன்னிலை வகிக்கிறார்.
12 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 11 மாவட்டங்களில் 154,657 வாக்குகளைப் பெற்று அநுரகுமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை 11 மாவட்டங்களில் அனுரகுமார திசநாயக்கவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க 52,482 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச 48,970 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அனுரகுமார வெற்றி பெற்றார்.
