11 மாணவிகள் துஷ்பிரயோகம்: ஆங்கில ஆசிரியர் கைது
குருநாகல் நகரிலுள்ள பிரதான கலப்புப் பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பதினொரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டள்ளார்.
பொத்துஹெர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐம்பத்தைந்து வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது பாடத்தை கற்பிக்கும் போது வகுப்பில் உள்ள மாணவிகளுக்கு விஷேட கவனம் செலுத்தி மாணவிகளின் அந்தரங்க பகுதிகளை தொட்டு துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தினசரி துஷ்பிரயோகம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இது தொடர்பாக குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.