11 நாட்கள் சிரிப்பதற்கு தடை விதிப்பு
வடகொரியாவில் சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் அதிபர் சிரித்தால் சிரிக்க வேண்டும் அழுதால் அழ வேண்டும் என்ற கட்டளைகள் இங்கு அமுலில் உள்ளன.
இந்த நிலையில் “மனிதன் சிரிக்கும் விலங்கு” என்ற கோட்பாட்டையே தடை செய்து வடகொரியா அரசு உத்தரவிடப்பட்டுள்ளமை வடகொரிய அதிபரின் சர்வதிகார போக்கை மேலும் வலுவடையச் செய்துள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவரது தந்தை மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பதற்காக அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் 11 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் இறந்த 11வது நினைவு தினம் கடந்த 17ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த குறித்த நாட்களில் மக்கள் எவரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் எதையும் வாங்கக் கூடாது என்ற கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த 11 நாள்களில், குடும்பத்தில் எவரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சத்தம் போட்டு அழக் கூடாதாம். மெதுவாகவே அழவேண்டும் இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று வடகொரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு சிரிப்பு, அழுகை என்பது எல்லாமே இயல்பாக வரக்கூடியது. அதற்கு தடை விதித்தது மட்டும் அல்லாமல் மீறினால் மரண தண்டனை என்பது எல்லாம் மிகவும் அதிகம் தான் என அண்டை நாட்டு இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.