11 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது

11 கோடி ரூபாய் பெறுமதியுடைய தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெல் வடிவில் குறித்த தங்கத்தை நாட்டுக்கு கொண்டு வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – கொம்பனி தெருவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த குறித்த நபரிடம் இருந்து 6 கிலோகிராமும் 423 கிராமும் நிறையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளது.