108 வருடங்களுக்கு முன்னர் இராணுவ அதிகாரி கொலை : விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமனம்

108 வருடங்களுக்கு முன்னர், இராணுவ அதிகாரியான எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் காலனித்துவ ஆட்சி காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக கலகம் செய்து, தேசத்துரோகம் செய்தமைக்காக ஹென்றி பேதிரிஸுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

எனினும், அப்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட சதித் திட்டத்தின் விளைவாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தண்டிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் வகையில் அமைச்சரவைக்கு பரிந்துரைகளை முன்வைக்க இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது