102 குழந்தைகள் : தனது 12 மனைவிகளுக்கு கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்படி உத்தரவு

“ஒரு ஆண் ஒரு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது”  என்றும் , தனக்கு 102 குழந்தைகளும் 586 பேரக் குழந்தைகளும் இருப்பதாகவும் , 12 மனைவிமார் , பல திருமணங்களைப் பற்றி மூசாவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் புகிசா என்ற கிராமத்தில் மூசா தனது மனைவிகள் அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், ” இப்படி இருந்தால்தான் மனைவிகள் ஏனைய ஆண்களுடன் உறவுகளை ஏற்படுத்த முடியாமல் அவர்களைக் கண்காணிக்க முடியும் ” என்றும் பதிலளித்துள்ளார்.

விவசாயியான இவரின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், எனது வருமானம் பல ஆண்டுகளாக குறைந்து, எனது குடும்பம் பெரிதாகி வருகின்ற நிலையில் இந்த கருத்தடை முடிவை எடுத்துள்ளதாக மூசா தெரிவித்துள்ளார்.

67 வயதான மூசா, தனது முதல் மனைவி ஹனிஃபாவை 1971ஆம் ஆண்டு தனது 16வது வயதில் தனது பள்ளிப் படிப்பை முடித்த கையோடு திருமணம் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மனைவி ஒரு மகளைப் பெற்றெடுத்தபோது அவர் அப்பாவானார். அந்த நாட்களில் மூசா அதிகம் சம்பாதித்ததால் அதிகமான பெண்களை திருமணம் செய்துகொண்டார்.

மூசாவின் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு 6 முதல் 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள். மூசாவின் மூத்த குழந்தை அவரது சிறிய தாயை விட 21 வயது மூத்தவர் மற்றும் மூசாவின் இளைய மகன் 6 வயது. அவர்கள் அனைவரும் மூசாவுடன் பண்ணையில் ஒன்றாக வசிக்கின்றனர்.

மூசா தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை தனித்தனியாக அடையாளம் காண முடியும் என்றாலும், அவர்களின் பெயர்கள் அனைத்தும் தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

மூசாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முன்பு போல் கடினமாக உழைக்க முடியாமல் போனது, குடும்பத்தின் மோசமான நிதி நிலைமைக்கு ஒரு காரணமாகும். மூசா தனது நிதி நெருக்கடியின் காரணமாக 700 பேர் கொண்ட தனது குடும்பத்தை விரிவுபடுத்த விரும்பவில்லை.

“குறைந்த வளங்கள் இருப்பதால் குழந்தைகளைப் தொடர்ந்தும் பெற்றெடுப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. அந்த வகையில் , குழந்தை பிறக்கும் வயதில் உள்ள என் மனைவிகள் அனைவரையும் குடும்பக் கட்டுப்பாட்டிற்குச் செல்லுமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி கற்பிக்க முடியாமல் தவித்து வரும் இந்த நிலையில் , மூசா இப்போது அரசாங்கத்திடம் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.