
101வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன்போது போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரால் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர்கள், கூட்டுறவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

