100 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட்போன்களுடன் இருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சேர்த்து ஸ்மார்ட்போன்களை கடத்திய, இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட்போன்களை சுங்கதிணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கொழும்பு-கிராண்ட்பாஸைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும், இன்று புதன்கிழமை டுபாயிலிருந்து நாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.