
100 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது
100 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
எயார்லைன்ஸ் விமானம் SQ468 மூலம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த 33 வயதுடைய பெண்ணே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து 100 மில்லியன் ரூபா பெறுமதியான 5 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
