
பொலிவுட் நடிகர் அக்சய் குமார் ஒரு பாடலுக்காக 100 கோழி முட்டைகளால் அடிவாங்கியுள்ளார்.
நடன இயக்குனர் சின்னிபிரகாஷ் சமீபத்திய செவ்வியொன்றின் போது இதனை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு சில ஹீரோக்களில் அக்சயும் ஒருவர். அவர் ஒரு கதாபாத்திரத்திற்காக 100 சதவீதம் உழைப்பார். நான் அவருடன் சுமார் 50 பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். எவ்வளவு கடினமாக ஸ்டெப்பாக இருந்தாலும் அவர் முயற்சிப்பார், என்னை ஒருபோதும் ஸ்டெப்களை மாற்றச் சொன்னது இல்லை.
‘கிலாடி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக அக்சய் குமார் 100 கோழி முட்டைகளால் அடிவாங்கினார் .
அந்த காட்சியில், பெண்கள் அவரைச் சுற்றி கூடி முட்டைகளால் அடித்தார்கள்.
அவர் மிகவும் எளிமையானவர் அக்சய் குமாரை போல கடினமாக உழைக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை” என்றார்.
